புதுடில்லி:சொத்துகளை முடக்குவதை எதிர்த்து, தொழிலதிபர், விஜய் மல்லையா தொடர்ந்து உள்ள வழக்கை, ஆக., 2ல், உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால், தொழிலதிபர், விஜய் மல்லையா, ஐரோப்பிய நாடான, பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு, லண்டனில் நடந்து வருகிறது.

இந்நிலையில், விஜய் மல்லையா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ‘கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு எதிராகத் தான், வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், எனது மற்றும் குடும்பத்தாரின் சொத்துகளை முடக்கக் கூடாது என, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு ஆக., 2ல், விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here