கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

0
128

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக ஊழியர்கள், திடீரென அந்த அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணிபுரிந்து வந்த தட்டச்சர்கள் சிலருக்கு கலந்தாய்வு நடத்தி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக ஊழியர்கள், திடீரென அந்த அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பணி மாறுதல் வழங்கப்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்ட மாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே விரோத போக்கை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் அனைவருக்கும் பணிமாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும், என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் உள்பட கல்வி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுடைய கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here